
தீப ஒளித் திருநாள் இன்று
அகமும் புறமும் ஒருங்கே
இருள் நீங்க அருள் பெற வேண்டிடுவோம்.
அன்பு மழை எங்கும் பொழிந்து
வாழ்வு தழைத்து வளம் பெற வேண்டிடுவோம்.
வேற்றுமைகளை மறந்து மக்கள் ஒற்றுமையை வளர்த்து , நாடும் நாமும் செழித்திடுவோம்.
இனிப்பு சுவைத்து இனிய வார்த்தைகள் பேசுவோம்,
காரம் உண்டு
அநீதிகளை கண்ட போது எல்லாம் வீரம் கொள்வோமாக.
வெடிகளை சரமாக
வெடித்து,வேடிக்கையாக இன்னல்களை,
துன்பங்களை சிதறடிப்போம்.
புத்தாடை அணிந்து பல வண்ண புதுமைகளை
வாழ்வில் சேர்ப்போம்.
உற்றமும் சுற்ற மும் நலம் பெற
நாம் சொல்லும் செயலும் ஒன்று என
இருந்தும் வாழ்ந்தும்
உலகிற்குக்
காட்டிடுவோம்.
