எம்.டி.முத்துக்குமாரசாமியின் பதிவு

ஹன்னா அரெண்ட்டும் மார்ட்டின் ஹைடெக்கரும் ஒருவருக்கொருவர் எழுதிக்கொண்ட காதல்கடிதங்களை வாசித்தேன். ஆரெண்ட் ஹைடெக்கரிடம் தத்துவம் பயிலும் மாணவியாக இருந்தபோது ஏற்கனவே மணமானவரான ஹைடெக்கரின் மேல் அவருக்குக் காதல் ஏற்பட்டது. நாஜிக்களை ஆதரித்த ஹைடக்கருக்கும் யூதரான ஆரெண்டுக்கும் காதல் ஏற்பட்டது விசித்திரமானதுதான். நாஜிக்களின் யூத அழித்தொழிப்புக்குத் தப்பி அமெரிக்காவுக்கு ஓடிப்போன ஆரெண்ட் ஃபாசிச எதிர்ப்புக்கான கூர்மையான அரசியல் தத்துவங்களை எழுதினார். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் ஜெர்மனிக்கு ஆரெண்ட் திரும்பியபோது ஹைடெக்கர் அவரைப் பார்க்க விரும்பினார். ஆரெண்டும் ஹைடெக்கரைப் பார்க்கப் போனார். அந்த சந்திப்பைப் பற்றி ஹன்னா ஆரெண்டுக்கு ஹைடெக்கர் “ நீ வந்து போன காலையின் பிரகாசம் இன்னும் என் அறையில் நீடித்திருக்கிறது “ என்று எழுதுகிறார்.