
ஏரிக்கரை அருகில் வீடு
வீட்டிலே பெரிய மரங்கள்
கொண்ட தோட்டம்
காக்கை முதல் குருவிகள்
கூடு கட்டும்
முட்டையிட்டு அடைகாக்கும்.
அதிகாலையில் குயில் தனிகுரலெடுத்து
கூவும் – சுருதி தட்டாத இசைதான்
குஞ்சுப் பறவைகள் மரத்தில் நடைபழகும்
குட்டி சிறகெடுத்து பறக்கப் பயிலும்
பார்க்கவே அலாதி சுகம்.
கண் விழித்ததும்
குயிலோசை கேளாது போனால்
மாலை வரை
நெருடல் இருக்கும்.
பறவையின் சில முட்டையும் குஞ்சும்
பாம்புக்கும் பூனைக்கும் உணவாகிவிடும்
பாம்பும் சரி பூனையும் சரி
தனித்தனியே மரமேறி வேட்டையாடும்.
அப்போது காக்கைகள் கூட்டமாகக்
கரைந்து அலைபாயும் , ஆனால்
காக்கைக் கூட்டினிலே – குயில்
முட்டை குஞ்சிருந்தாலும்
குரல் எழுப்பாததேன் ?
வேடிக்கைதான்.
