சசிகலா விஸ்வநாதன்/ஜனனம்

இனிய மாலை வணக்கம்
சொல் புதிது
திங்கள் கிழமை
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 6-15


புது மதலை வதனம்:
செந்தாமரை என்க.
முதல் சிணுங்கல்..
முதல் அழுகை..
புதியதொரு பூபாளம்.
தேன் மலர் தித்திப்பு,
கொம்புத்தேன் இனிப்பு,
தேடா நின்ற புதையல்,
காணா நின்ற கனவு,
அத்தனையையும் வரமாய் தந்த,
பிள்ளையின் வதன ஒளி,
மின்னல் என மினுங்கும்
இதழோர புன்னகை;
அத்தனையும் அள்ளி
சிதறும் பிள்ளையின்
முகனை ஒளி…
அன்னையின் சிலிர்ப்பு;
அதுவே
ஐயனின் ஈர்ப்பு


13-11-2023