எஸ்ஸார்சி/மனிதன்

இணையக் கால கவியரங்கம்
13/11/2023

போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு
எங்கும் இரைச்சல்
மனிதர்வாழ் நகரங்கள்
இரைச்சலின் மொத்தக் குத்தகை
காடுகளுக்குச்சென்று
தவம் இயற்றி அமைதியாய்
வாழ்ந்தக் காலம் இருந்தது
இப்போது வீடுகளுக்குள்ளாக
எத்தனைத் தொலைபேசி சேவைகள்
எப்போதும் ஏதேனும்
தொலைக்காட்சி விளம்பர ஒலி
தொடரும் கைபேசி ஆரவாரம்
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சென்பதே
இவைகளின் அறிவிப்பு
யாரும் யாருடனும் பேசக்கூச்சப்படுகிறார்கள்
மொபைலும்
கையுமாய்
கழிகிறது வாழ்க்கை
மொபைல்தான் மனிதனின்
இன்னுமொரு இதயம்.
மானிடர்க்கு விடுதலை
இனி சாத்தியமே இல்லை.