காளி-தாஸ்/தூரத்து உறவுகள்

ஊருக்கு மிக வெளியில் என் வீடு
ஆறு மணிக்கு காலை வாசலுக்கு வந்து விடுகிறார்
பால்காரர்
காய் விற்பவன் மறக்காமல் 7:00 மணிக்கு
பஸ் ஏறி குழந்தைகளை மனைவி
பள்ளிக்கு அழைத்துப் போகிறாள்
அலுவலகம் போய் வர நான்
பேருந்து இரண்டு மாறுகிறேன் அவ்வப்போது பொருட்காட்சி
ஓவிய கண்காட்சி கடற்கரை சினிமா எல்லாம் உண்டு ஊருக்குள் உறவினர்கள் வீடு
போய் வர நினைத்தால் மட்டும்
தூரம் தெரிகிறது
அவர்களுக்கும் அபிப்பிராயம்
ஊருக்கு மிக வெளியில் என் வீடு