சுரேஷ் ராஜகோபால்/பேதையாய் போனேன்

சொல்புதிது, இணைய கால 27வது கவி அரங்கம் 14 11 2023, செவ்வாய்க் கிழமை நேரம் மாலை 6.05 “பேதையாய் போனேன்” என்ற தலைப்பில் எனது கவிதையைப் படிப்பது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால்.

நேற்று என்னுடன்
வேற்று முகத்துடன் பேசினாயே
அப்போது ஏசினாயே
யாது குறை கண்டாய்
யாமறியேன் தெய்வமே .

வாதம் செய்துதான்
வாழ்தல் என்றால் வேண்டாமே
மனம் விட்டுப் பேசியே
தினம் கழிக்கலாம்
புண் படுத்தாதே, நெஞ்சமே
பண்படுமே வாழ்க்கை.

கொட்டிய வார்த்தை
கெட்டியாய் மனதை உறுத்துகிறது,
புரியாது மறுத்துப் பேசவைத்தால்
பேதையாய் போனேன்
துவண்டு மீண்டேன்.