லவகுசா/ப.மதியழகன்

சொல்புதிது 27ஆவது இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை

காலம் ஸ்தம்பித்தது
தன்னுணர்வு திரும்பவில்லை
வெறும்
வரவு செலவு கணக்குத்தான்
கையேந்துபவனுக்குத்தான் தெரியும்
காசின் அருமை
அலை பிடித்திருந்தாலும்
கடலில் குடித்தனம்
பண்ண முடியாது
ஆர்வத்தோடு மேகத்தைப்
பார்க்கிறேன்
கடவுளிடமிருந்து செய்தி
வந்துள்ளதா என்று
நாரைகள் அணிவகுத்துச்
செல்கின்றன
என் கைகளிலோ விலங்குகள்
மழையின் முத்துத் தூறல்கள்
தோல்களின் பட்டுத் தெறிக்கின்றன
சாவை அழைப்பதிலும்
ஒரு சுகம் இருக்கிறது
எங்கோ சிறகடிக்கும்
வண்ணத்துப்பூச்சிக்கும்
ஏதென்ஸ் நகரத் தெருக்களில்
பெய்யும் மழைக்கும்
தொடர்பிருக்கத்தான் செய்கிறது
இங்கு எதுவும்
என்னுடையதல்ல எனும்போது
ஏதோவொன்று நழுவிவிடுகிறது
எனது மனதிலிருந்து!