அடுப்பங்கரையில்
பகலைக் கழித்து
தனியறையில்
இரவைக் கழித்து
உயிர் நீத்த
பெண்ணுக்கு
உறவுகளுக்கு முன்
கண்ணீர் அஞ்சலி
செலுத்தினர் குடும்ப உறவுகள்!
மரித்துப் போன பெண்ணின் சடலத்தின் கண்களில்
கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகள்!
யாருக்காக இந்தச் சடங்கு?
உதடுகள் உச்சரித்தவை
ஒருத்தருக்கும் கேட்கவில்லை!
இது அவளுக்கு ஒன்றும் புதிதல்ல!
பதிலில்லாக் கேள்விகள்ச
பலப்பலப் பார்த்தாச்சு
சடங்குக்காக வாழ்ந்தவள்
சடங்குகளை ஏற்று
சற்று நேரத்தில்
நெருப்பை தழுவிக் கொள்ள தயாரானாள்!
ஆனாலும்
நெஞ்சாங்குழி வேகுமோ?

சிறப்பு !உட்பொருள் கொண்ட கவிதை.