
சொல் புதிது, இணைய கால 28வது கவி அரங்கம்,தேதி 15 11 2023, கிழமை புதன், நேரம் மாலை 06.05, “வாழ்வில் யதார்த்தம்” என்ற தலைப்பில் எனது கவிதையை தாம்பரம் சுரேஷ் ராஜகோபால் படிக்கிறேன்.
காலை வரும்
மாலை வரும்
நாள் மாறி
வாரம் வரும்
மாதம் கடக்கும்
வருடங்கள் உருண்டோடும்.
நல்ல நாள் வரும்
நல்ல சேதி வரும்
நாள் தரும் கவலைதனை
கடந்து நடந்தால்
புது வாய்ப்பு
வந்த வண்ணம் இருக்கும்.
நாளும் கோளும் மாறலாம்
நம் நிலையும் மாறலாம்
நம்மை உணர்ந்தால்
வாழும் வாழ்க்கை
பயன் தருமே, அதனால்
உலகுக்கு உதவலாம்.
நேற்று பிறந்தோம்
இன்று வளர்ந்தோம்
நாளை மறைவோம்
இதற்குள் பிணக்கு எதற்கு ?
புன்னகையுடன் வரும்
நாளை ஏற்போம் எந்நாளுமே.
