
சொல் புதிது 29 வது இணைய கால கவியரங்கம்.
கவிதை வாசிப்பது சிறகா .
திடீரென்று தோன்றினான் பயாஸ் கோப்பு கார ன்
ஒரு கண் மூடி ஒரு கண் திறந்து வைக்க சொல்லி
இதுவரை பார்த்திராத அழகிய வித்தியாசமான
காட்சிகளை கடகடவென மாற்றியவாறு
பரவசத்தில் மனம் மூழ்கி திளைக்கும் முன்
பார்வையை ஊடுருவி காணாமல் போனான்
வந்த வழியும் காணோம் போன சுவடும் இல்லை
அவனின் குரலோ சை மட்டும் எட்டுத் திக்கும்
காற்றில் கரைந்து இல்லாத கதையின் பாடலை
இசைத்து கொண்டே மெல்ல மெல்ல மறைகிறது.
