
இணைய காலக் கவியரங்கம்
அன்பே இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இன்பத் தீயை மூட்டி
ஈரத் துன்பம் ஓட்டு
உன்னைப் பார்த்த போதே
ஊறி வந்த காதல்
என்னைப் போட்டு வாட்டி
ஏறிப் போச்சு கூட்டி
ஐயம் இன்றிச் சொல்வேன்
ஒன்று இரண்டு தடவை
ஓர இதழைப் பட வை
அவ் விதழ்கள் மோதும்
அக் கணமே போதும்
——————————
