
இணையக் கால கவியரங்கம்
21/11/23
எஸ்ஸார்சி வாசித்த கவிதை
ஜன்னல் துடைக்க மாட்டீர்
கதவுப் பூட்டுக்கு எண்ணெய்
விடமாட்டீர்
ஒட்டடை அடிக்க மாட்டீர்
ஸ்டவ் க்ளீன்
செய்யவும்
மாட்டீர்
வாஷிங் மெஷினில் துவைத்த துணியை
எடுத்துக் காயவைக்க மாட்டீர்
காய்ந்த துணியை எடுத்து
மடித்து வைக்க மாட்டீர்
சூடு ஏறாது மக்கார் செய்யும் அயர்ன் பாக்சைப்
பற்றிக் கவலைப்பட மாட்டீர்
காய்கறி கறிவேப்பிலை பால் தயிர் இருப்பு
எதுவுமே தெரியாது
பூக்காரி தெருவில் வந்தால்
பூ ஒரு முழம் வாங்கமாட்டீர்
இலக்கியக் கூமட்டத்திற்கு
மட்டும்
சட்டை போட்டுத் தலைவாரி
எப்படி அய்யா கிளம்புகிறீர்
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு.
என்னைத்தான் கேட்கிறாள்
வேறு யாரையும் இல்லை அய்யா.
