லலிதா ஷியாம் கவிதை

உன்னால்தான் நான் உயிர்த்தேன்
உன் கண்கள் காந்த கண்கள்
அனிச்ச மலரைவிட மென்மையானவள்
உன் கால் கொலுசு சத்தம் நாதம்
அணிந்திருக்கும் கை வளையல்களோ கீதம்
என் மனம் உன் அழகில் மயங்குகிறது.

உன் வருகைக்காக நான் காத்திருந்தேன்
மனதில் ஒரு சுகமான ஆசை
அதுவே உன்னை காணும் ஆசை
கடற்கரையில் அலைகளின் சத்தம் தேவ கானம்.
உன்னால் நான் உயிர்த்தேன்
வசந்தம் வாசல் தட்டுகிறது.
சுகந்தம் சகமாய் வீசுகிது.

One Comment on “லலிதா ஷியாம் கவிதை”

Comments are closed.