லக்ஷ்மி ரமணன்/தங்கமகன்

சந்தோஷ்தான் எப்போதும் வகுப்பில் அதிக மதிப்பெண்கள்
வாங்குவான். பெற்றோர்களான மாதவன் மற்றும் மாலதிக்கு
அது பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.
சந்தோஷ் என்ற பெயருக்கேற்ப அது பெற்றோர்களுக்கு
சந்தோஷத்தை அள்ளித்தந்தது என்று நிச்சயமாகச்சொல்ல
முடியும்
ஆனால்… இந்த முறைஎன்னவாயிற்று.?
அவன் குறைவான மார்க் வாங்கி முதலிடத்தை கோட்ட
விட்டது ஏன்?
எதுவுமே நடக்காத மாதிரி அவன் எந்தவித பதட்டமும் இல்லாதவனாக அமைதியாக இருந்தது பெற்றோருக்கு
கவலையை அளித்தது
அன்று இரவு மெல்ல பேச்சைத்துவங்கிய மாதவன் தயக்கத்துடன் மகனைக்கேட்டான்

“இந்த வாட்டி பரீட்சை சரியாக எழுதலையா”?
ஆமாம்
ஏன் ?
நான் வேணும்னுதான்சரியா எழுதல்லே.
என்ன?
வாழ்க்கையிலே எப்பவுமே நான் முதலிடத்தில் இருக்க முடியாதென்பது நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம
அந்த இடம் நழுவிப்போனால் அதை ஏத்துக்கிற மனப்பக்குவம்எனக்கு நிச்சயம் இருக்கணும்.ஏமாற்றங்களை
ஏற்றுக்கொள்ளவும் போராட்டத்தைத் தொடரவும் மன உறுதி
எனக்கு இருக்கணும். அதற்கு என் மனசைப்பக்குவப்படுத்திக்
கதான்அப்படிச்செய்தேன் கவலைப்படாதீங்க அடுத்தவாட்டி
வழக்கம்போல் சரியாக பண்ணிடுவேன்”
பதினைந்து வயதைக்கூட தாண்டாத தன் மகனுக்கு இத்தனை
மனப்பக்குவமா என்று நினைக்கையில் மாதவனுக்கு
மிகவும் பெருமையாக இருந்தது.