சசிகலா விஸ்வநாதன்/மிகை எதுவும் நஞ்சு

இனிய மாலை வணக்கம்.
சொல் புதிது.
இணைய கால கவியரங்கம்.கள்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
மிகை எதுவும் நஞ்சு

தேவைக்குஅதிகமான
அனைத்தும் நஞ்சே
என கொள்க.
மிகை செல்வத்தில்,
லோபம் முளைகிறது.
மிகை அதிகாரத்தில் ஆணவம் துளிர் விடுகிறது,
மிகை வேட்கையில்
பேராசை முளைக்கிறது.
மிகு பெரும் வெற்றி பெரும்
ஆணவமாகிறது
மிகையான அன்பு.. ஆளுமையாகிறது
மிகு ஓய்வு மடியாகிறது.
மிகு துய்ப்பு வெறுப்பாகவும்;
மிகு அச்சம் தவறாகவும், ஆக;
மிகையை விரும்பேல்; மனமே!
நிலையாய் மிதமாய் இரு.


22- 11-2023