தங்கேஸ் கவிதை

யானை காதுகளை அசைக்கின்றது
சேம்பின் இலைகள்

தூவானம் ஏரியில்
மிதக்கின்ற நிலவை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
சிலேபி கெண்டைகள்

பிம்பத்தில் தேன் உறிஞ்ச
தாழப் பறந்து திரியும்
கருநீலப் பட்டாம் பூச்சிகளில்
ஒன்று
உன்னை ஞாபகப்படுத்தியபடியே
சுற்றி சுற்றி சிறகடிக்கிறது

புற்களின் மீது சொரிந்து கிடக்கும்
பனித்துளிகளை
நிலவின் பூக்களென
மனது வியக்க

இரவை அழித்து அழித்து
வலை கட்டி விளையாடுகிறது
உறங்காத சிலந்திப் பூச்சி

2 Comments on “தங்கேஸ் கவிதை”

Comments are closed.