
கள எலியின் குரலில்
—
பால் செலான்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
கள எலியின் குரலில்
நீ என்னை நோக்கிக் கீச்சிடுகிறாய்,
ஒரு கூர்மையான
துண்டு
என சட்டையின் வழியே என்னைக் கடித்து என் தோலை நீ அடைகிறாய்,
ஒரு துணியை
நீ என் வாய்க்குக் குறுக்கே நழுவவிடுகிறாய்
சொற்களுக்கு மத்தியில்
நான் உன்னை அழைக்கிறேன், நிழலே
உனக்கு எடை அளிப்பதற்காக.
——
இதயத்தினால் திக்கிப் பேசப்படும் உலகு
—
பால் செலான்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
இதயத்தினால் திக்கிப் பேசப்படும் உலகில்
நானொரு விருந்தாளியாய் இருப்பேன்
ஒரு பெயர்
சுவரிலிருந்து வியர்வையாய் சிந்தப்படுவது
நக்கப்பட்ட ஒரு காயம்.
—
ஜனவரியாதல்
—-
பால் செலான்
தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
முட்களால் சூழப்பட்ட
பாறை இடை ஓய்வுக்காலம்
ஜனவரியானது. ( நன்றாகக் குடித்துவிட்டு
அதை பாரிஸ்
என்றழை.)
உறைபனியால் மூடப்பட்ட என் தோள்
மௌனமாக
இடிமான ஆந்தைகள் அதில் அமர்ந்திருக்கின்றன;
என் கால் விரல்களிடையே எழுத்துக்கள்
நிச்சயம்.
