மழை பிடிக்கவில்லை


ஆர் வத்ஸலா

சூல் கொண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
சடசடக்கும்
பெரிய பொட்டுகள்
மூடிய ஜன்னலில்
அருவியாகி கொட்டும் மழை
எல்லாமே
எரியும் காயத்தில்
ஆவியாகிறது

நீ இல்லாத போது
எதற்காக பெய்கிறது இந்த மழை
31/10/21

One Comment on “மழை பிடிக்கவில்லை”

Comments are closed.