
39வது இணைய காலக் கவியரங்கம்
பிரியாவிடை..
பிரிந்து செல்லும் நாளில் நட்புடன்
கொட்டித் தீர்த்த அன்பின் மிச்சங்கள்
விழிவழிக் கண்ணீராய் கோடிறங்க
சுற்றித் திரிந்த தருணங்கள்
சுகானுபவமாய் நினைவில் மீட்ட
பகிர்ந்து கொண்ட தேநீரின்
கடைசி சொட்டின் தித்திப்பாய்
பரவசம் மெய் தீண்ட
வாழ்வின் தேடல் நோக்கி
கையசைவில் தொடரும் பயணங்கள்
சுகமான சுமையாகிப் போகின்றன.
.
