
சொல் புதிது, இணைய கால, 41வது கவி அரங்கம், தேதி 29 11 2023 கிழமை புதன் , நேரம் மாலை 05.35, “மழையென்னும் நான் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
வானின்று விழும் துளி
நான் மழையாவேன்
தொடர்ந்து பெய்து விட்டால்
பெருமழை என்பர் என்னை.
வறண்ட பூமியில் பெய்தால்
வரவேற்பு கிடைக்கும்; நீர்
மிகுந்த நிலத்தில் பெய்தால்
முகம் சுளிப்பர்.
தேங்கினால் சகதி
என்றே ஒதுக்கிடுவர்
ஓடினால் ஓடையாவேன்
வாய்க்காலில் நிறைந்து ஓடுவேன்.
நில்லாமல் பெரு மழையாகப்
பெய்தால் சலித்திடுவர்
சாலைகள் ஆறாகிப் போனதால்
சேறாகிப் போச்சே வாழுமிடம்.
போக்கிடமின்றி தவித்திடுவோர்
அண்ட ஓரிடமில்லை எங்கேனும்
அடைக்கப் படுவார், ஒதுங்க ஓரிடம்
கிடைத்ததால் தூங்காமல் விழித்திருப்பர்.
என்பணி நான் செய்ய
இயற்கையிட்ட கட்டளை
செய்யாது போனால் தூஷிக்கப்படுவேன்
என்நிலை என்னவென்று சொல்வது?
சிட்லப்பாக்கம்
29 11 2023, 05.35 PM
