
பறத்தலைத் தவிர
வேறொன்றும் அறியாத
பறவை
எப்படி கூடடைந்துக் கிடக்கும்
இந்த மழைநாளில்?
யார் ஒருவாய் உணவு இட்டு வருவார்?
அன்றாடம் வந்து செல்லும்
பறவை வராத போது
அடித்துக்கொள்ளும்
மனதிற்குள்
ஒளிந்து கிடக்கும் தாய்மையை
நெட்டி முறித்து
பத்திரமாய் வைத்துகொள்கிறேன்
நாளை
இன்னும் சிலருக்கு தேவைப்படலாம்
