சுரேஷ் ராஜகோபால்/மழை – விளையாட்டுப் பிள்ளை

சொல் புதிது, இணைய கால, 43வது கவி அரங்கம், தேதி 01.12 2023 கிழமை வெள்ளி, நேரம் மாலை 05.15, “மழை – விளையாட்டுப் பிள்ளை” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

மழை எப்போதும்
விளையாட்டுப் பிள்ளை
வானுக்கும் பூமிக்கும்
போய் வந்து
வண்ணம் ஜாலம் காட்டுது.

சிறு தூரலில் ஆரம்பித்துப்
பெரு மழையில்
பூமியைத் தள்ளாட வைக்கிறதே
மழையே ஏனிந்த விளையாட்டு?

விண்ணாளும் கோமான்
பூமித்தாய்க்கு அளித்திடும்
பரிசு மழை மாலையோ, நேரத்தே
பெய்தால் எனக்கும் மகிழ்ச்சி,

இடைவிடாது பெய்தால்
ஏற்படும் தளர்ச்சி
வழியெல்லாம் நீரோட்டம்
வாழ்வதே இங்கு போராட்டம்.


சிட்லப்பாக்கம்
01 12 2023 மாலை 05.15

2 Comments on “சுரேஷ் ராஜகோபால்/மழை – விளையாட்டுப் பிள்ளை”

Comments are closed.