சசிகலா விஸ்வநாதன்/பாமரன் அறியான் பரமனின் சூட்சுமம்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணையகால கவியரங்கம்
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு


பாமரன் அறியான் பரமனின் சூட்சுமம்


மழை வரும்;
துளிர் விடும்
தளிர் தழைக்கும்;
கதிரவன் ஒளிர…
கதிரவன் ஒளிர்ந்தாலும்;
பதமான மழைதான்
வேண்டும்….
அளவாக.
பேய் மழை ஏதுக்காகும்?
பேய் மழை
பொழியும் காலம்;
மாயுமே மனம்!
முளைக்கும் முதிர்
கதிர் கண்டு…
முளைக்கும் முதிர்
கதிர் கண்டு..
பதறுமே மனது.
பதறுவான் விவசாயி.
கதறும் விவசாயியின்
குரல் எட்டுமோ;
அந்த பரமனுக்கு?
பாமரன் அறியான்!
பாமரன் அறியா சூட்சுமம் ஒன்று உண்டு.
பரமன் அறிவான் அதை.
எதை, எப்போது,
நிகழ்த்த வேண்டும்;
எதை எப்போது
நிறுத்த வேண்டும்;
சமன் செய்யும்
சமர்த்தன் அவன்.
அவன் முடிப்பான்;
நேரம் கருதி.


1-12-2023