இணைய காலக் கவியரங்கம்

அதிகாலை ஐந்து மணி
அமைதியின் மௌன மணி
சந்திரப் பிறைக்குச்
சாயங்கால நேரம்
கொஞ்சம் கொஞ்சமாய்க்
குறையும் இருட்டு
சத்தமும் புகையும் இல்லாச்
சத்தான காற்று
தூங்கிய மரங்களின்
சோம்பல் முறிப்பு
குச்சிக் கூட்டுக்குள்
குருவிகள் கீச்கீச்
வேர்வைக்கு வேலை வைக்கும்
விறு விறு நடைகள்
பத்திரிகைப் பையோடு
சைக்கிள் பையன்
பாற் குடத்தோடு
பைக்கில் பெரியவர்
போர்வைக்குள் இருந்தால்
புரியாது இவையெல்லாம்
———————–

👏👏👌🌺
அமைதி மணி கவிதையில் இறுதி இரண்டு வரிகள் அருமை !
– பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை