
இணையக் காலக் கவியரங்கம்
நாள் 1.12.23
அடிக்கடி
மழை பெய்கிறது
விட்டு விட்டும்
பெய்கிறது…
அடிக்கடிக் கவிதைகள்
எழுதுகிறேன்..
பக்கத்து வீட்டில் ஓர் ஆடு
நான்கு குட்டிகள்போட்டுத்
தாயும் குட்டிகளும் கத்துகின்றன.
எதிரே காலி மனையில்
பன்றி வாசம் நாற்றமுடன்..
லேசாகப் பெய்யும் மழை நேரத்தில்
கொஞ்சம் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன..
மின் கம்பியில் சில பறவைகள்
அமர் கின்றன.. பறந்தோடுகின்றன..
அடிக்கடி மழை பெய்கிறது
அடிக்கடி கவிதை எழுதுகிறேன்.
