
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
சனிக்கிழமை
இணைய கால கவியரங்கம்
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
சிறு வயதில்
அம்மா கைவிரல்
கோர்த்து மஞ்சணகார தெரு
சென்று;
கட்டு ஜுன்னடி
பொட்டு ஜுன்னடி
துணி வாங்கி
கவுன் பாவாடை
சட்டை மேலாக்கு
வாங்கினதெல்லாம்
பழங்கதையாயிற்று!
வீதி வீதியாய்
அலைந்தும்,
ஒரு கட்டு சுங்கடி சீரை
கையில் பிடிக்க இயலா
மனம் கனக்கிறது.
மதுரைக்கு வந்த விதியா?
வீட்டுக்கு வீடு
ஜுன்னடி கட்டுவோர்;
எங்கே அவர்கள்?
கட்டு சுங்கடி கேட்டால்..
சிரிக்கும்
வியாபாரிகள்;
என்னை பைத்தியம்
என்றே நினைத்து;
“இப்பத்து ஃபேஷன்
இதே, “என
கொச கொச என
இனம் தெரியா
சித்திரங்கள்..
வடிவமைப்புகள்..
இட்ட சேலைகளை
இடுகிறார்கள்;
என் முன்னே!
கைத்தறி ஜுன்னடி சேலையை
கனவில் தான்
கட்டணும் போல!
கண்முன்னே ஒரு
கலை செத்து விட்டதா?
ஜுன்னடி கட்டுதலே
வாழ்வின் ஆதாரம்
என இருந்த சமுதாயம்
இப்போது என்ன செய்கிறது?
இதுதான் என் கேள்வி!
சசிகலா விஸ்வநாதன்
2-12 2023
