அனங்கன்/கொஞ்சம் குற்றமுள்ளவனாய் இரு.

்்்

உன்னுடன் எப்படி வாழ்வதென்றேத் தெரியவில்லை….

உனக்குக் காதலியாய் இருப்பது வெறுமையுடன்
போராடிக்கொண்டிருப்பது
போல்தான் இருக்கிறது….

அழகாய் இருக்கிறாய்…எதிலும் நிறைவாய் இருக்கிறாய்…

என்னைக்கண்டு மறைக்கும்படியான குற்றங்கள் உன்னிடம் ஒன்றுமில்லை…

உன்னைத்திருத்தவும்…எனக்கு நீ பயப்படும்படியான ஒரு
கெட்டபழக்கமும் உனக்கு இல்லையென்றால் உன்னைநான் எப்படி ஆள்வது…?

காதலா! எதிலும் நல்லவனாய்
இருப்பதுகூட பெண்ணுக்கு ஒருவகையில் ஏமாற்றாந்தான்…

ஒரு பாக்காவது போடக்கற்றுக்கொள்ளேன்…


♦.