
சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
பணம்தான் வாழ்வு என்றே
வாழ்ந்து வருகிறோம்
பணம் கிட்டியபின்
குணம் கெட்டு
தரிகெட்டு திரிகிறோம்.
வாழும் வாழ்வுக்குப்
பணம் தினம் தேவைதான்
தேவைக்கு மேலே
துரத்திப் பிடிக்கும் மனிதா
யார் வாழ்வை அபகரிக்கிறாய்?
தெரியுமா? அபலைகள்
ஏமாளிகள் ஓரமாக
ஓரங்கட்டப் படுகின்றனர்
உன்பணம் எத்தனை தூரம்
கூட வரும் தெரியுமா?
நம்போல் மற்ற உயிரினங்கள்
பணத்துக்கு அலைவதில்லை
கிடைத்தாலும் கொள்வதில்லை
சீண்டிப் பார்ப்பதுமில்லை
அததன் வழியில் மட்டுமே வாழும்.
சிட்லபாக்கம்
03 12 2023, மாலை 05.45.
