சசிகலா விஸ்வநாதன்/மனதின் ஓலம்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு


காணாச் சொந்தம்;
கிட்டா அன்பு;
பேணாப் பந்தம்;
பேசா உறவு;….
நாம் ஒரு தாய் மக்களா?
நம் கொடி ஒன்றேதானா?
ஒரு பானை சோற்றைப்
பகிர்ந்து உண்டவரா?
ஒரு கூரையின் கீழ்
விளையாடி உறங்கினவரா?
ஒரு நாளும் உன் இல்லம்
நான் வரலாகாதா?
ஒருநாளும் நீ என்
இல்லம் வரலாகாதா?
நாம் ஏன் பிரிந்தோம்?
ஏங்கும் மனதிற்குப் பொங்கும் கண்ணீரே
சான்று.
அழைப்பேதும் இல்லாமலே;
எதிர்பார்ப்புகள் ஏதும்
இல்லாமலே;
சற்றே உன்னை
அணைக்க;
சற்றே உன் மடியில்
கண் அயர;
சேர்ந்து காலாற நடை போட…
நான் வரும் நாளை
எதிர் நோக்கு!
ஒரு நாள் நான் உன் இல்லம்
திடுமென வந்து நிற்பேன்
காத்திருப்பாய் அல்லவா?



3-12-2023