எங்கள் தெருவிலுள்ள
இளைஞர்கள்
கூட்டம் கூடி
என் வீட்டில்
கார் வைக்குமிடத்தில்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்
போ என்றால்
போக மறுக்கிறார்கள்
இன்னும்
மழை ஓய்ந்தபாடில்லை
தெரு முழுக்க உள்ள
கார்கள் எல்லாம்
எங்கள் வீட்டுத்
தரை தளத்தில்
நிரம்பி
வழிகின்றன
சிலர் டூ வீலர்களையும்
வைத்துவிட்டுச் செல்கிறார்கள்
கொஞ்சம் கொஞ்சமாக
மழை நீர்
தெருவில்
பெருக்கெடுத்து
ஓடுகிறது
இரவு நேரம் வரைக்கும்
நீடிக்குமென்றால்
பழைய நிலைக்கு
திரும்பக் கூடும்
புத்தக நிலையை
எண்ணிதான்
கவலையாக இருக்கிறது.
2015 நிலை மட்டும்
ஏற்படக்கூடாது.
