எம்.டி.முத்துக்குமாரசாமியின்கவிதை

சில சமயங்களில் கோடோவுக்காகக் காத்திருத்தல் என்பது மழை நீர் வடியக் காத்திருத்தல், மின்சாரம் வரக் காத்திருத்தல். பால் கிடைக்கக் காத்திருத்தல். மருந்துகள் கிடைக்கக் காத்திருத்தல், குடி நீர் கிடைக்கக் காத்திருத்தல், இண்டர்னெட் கிடைக்கக் காத்திருத்தல், காத்திருத்தல் முடியக் காத்திருத்தல், காத்திருத்தலிலேயே முழு வாழ்க்கையும் கழிந்துவிட்டதை உணரும் விழிப்பு நிகழக் காத்திருத்தல், கைபேசி எண்களின் சுழல் குரல்களில் சிக்கி பதிலுக்காகக் காத்திருத்தல், கடைசியாகக் கிடைத்த கைவல்ய பதிலும் காத்திருக்கும்படி அறிவுறுத்தியதால் காத்திருத்தல்