இணையக் காலக் கவியரங்கம்நாள் 7.12.23/ஹரணி

தனித்தனியாக ப் பிரித்து
வைத்திருக்கிறேன் என்றேன்…

எல்லாவற்றையும் துவைக்கத்தான் போகிறேன் ஒன்றாகப்
பிரிக்க வேண்டாம்
அப்படியே வையுங்கள்
அதுதான் சரிப்படும்
என்றார்..

சலவை செய்யும்போது
வகை பார்த்து செய்து விடுகிறேன்
எல்லாமும் சரியாகிவிடும்
என்றார்..

சரியாக வேண்டும்
துணிகள் மட்டும் அல்ல
வாழும் வாழ்வுந்தான்..