நாகேந்திர பாரதி/சாவி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49

பூட்டின் ரகசியக் கதவைப்
புரிந்து வைத்திருக்கும்
சாவி

ஒவ்வொரு மனதைத் திறக்கத்
தேவை ஒவ்வொரு
சாவி

தொலைத்து விட்ட உறவில்
தொலைந்து போன
சாவி

மாட்டிக் கொண்டு முழிக்கிறது
மற்றொரு பூட்டில்
சாவி