போர்ஹெஸ்/நிரந்தத்தன்மை




தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி
———
ஒன்றே ஒன்று மட்டும் இருக்கவில்லை- மறதிநிலை
உலோகத்தைக் காப்பாற்றும் கடவுள்
உபயோகமற்ற உருகும் உலோகத்தின் மேல் படியும் கசடையும் காப்பாற்றுகிறார்
அதைத் தன்னுடைய தீர்க்கதரிசன நினைவில் சேமித்தும் வைக்கிறார்
இன்னும் வரப்போகிற நிலவுகள், ஏற்கனவே ஒளிவீசிய நிலவுகள்.
எல்லாமே அங்கே இருக்கின்றன.
வைகறைக்கும் அந்திக்கும் இடையில் உனது முகம்
பல கண்ணாடிகளில் விட்டுச் சென்ற பிரதிபலிப்புகள்
அந்த முகங்கள் இன்னும் விட்டு விலகிப் போய்க்கொண்டே இருக்கும்.
எல்லாமே பல்வகைப்பட்ட பிரதிபலிக்கும் நினவின் பகுதி, இந்த பிரபஞ்சம்;
அதன் வற்புறுத்தும் தாழ்வாரங்களுக்கு முடிவே இல்லை
அது போலவே நீ போகப்போக உனக்கு பின்னால் சாத்தப்படும் கதவுகளுக்கும்.
சூரிய அஸ்தமன ஒளிர்வின் தூரத்துப் பக்கம் மட்டுமே
உனக்கு வகைமாதிரிகளையும் பேரழகையும் கடைசியாகக் காட்டும்.