
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 54
அரநெல்லி மரத்து
மஞ்சள் புளிப்பு
தென்னை மரத்துப்
பட்டை நடனம்
தோப்புச் சூழல்
துள்ளும் மீன்கள்
நடுவில் மிதக்கும்
தாமரைப் பச்சை
தண்ணி மொள்ளும்
குடத்துப் பெண்கள்
ஊருணித் தண்ணீர்
ஊறிய ரத்தம்
கோடையில் அழியுதாம்
தண்டோரா சப்தம்
மீனைப் பிடிக்க
மேவும் கூட்டம்
——————-
