
இனிய மாலை வணக்கம்.
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
செவ்வாய்க்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
அடாத மழை ஒன்று பெய்ய;
“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியது
வாயில் தாழ்வாரத்தில்.
சற்று நேரத்திலேயே
வந்தனர் ஆணும் பெண்ணுமாய்
இருவர்.
மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:
காலம் கெட்டு கிடக்கு:
அவர் குரல்…
ஓங்கி ஒலிக்க…
கெஞ்சும் பாவனையில்; சிறுசுகள் இரண்டும்.
கையில் கிடைத்த
பாயையும் பழம் புடவையையும்
அவர்களிடம் தந்து
தாளிட்டு ஏறினேன்.
மாடிப்படி
இரவெல்லாம் ஏதேதோ முனகல்… ஓங்கார ஒலி;
மழையின் ஒலியுடன்
மழையின் ஊடே
வலியின் வலிமைதான் அறிந்தேன்
பார்வைக்கு ஏதும் சிக்கவில்லை.
காலை கண்விழித்து
கீழே வந்து பார்க்க;
கருநிற கன்னுக்குட்டி முன்னிற்க;
சீம்பால் சொம்புடன்
அம்மா! உன் பெயர் தான்
வைச்சுருக்கோம்..
மங்களம்!
சினைப்பசுவை தேடி வந்தோம்;
ராவிலே எமக்கு இடம் கொடுத்தீக;
எசமானரையும் மீறி..
விரட்டி விடாமல்…
கும்பிட்டுக்கிடறோம்
நல்லா பிழைங்கன்னு நல்ல வார்த்தை ஒன்று சொல்லி ப்போடு.. தாயி!
சட் என் கண்ணில் நீர் கோர்க்க;
நினைவில் வந்தது ஒரு திருவருட்பா.
12-12-2023ć
