லக்ஷ்மிரமணன்/என்னதான் பிரச்சினை?

ரத்தப்பரிசோதனை ரிப்போர்ட்டைபரிசீலனை
செய்த டாக்டர் ரகுவரன் ,”எல்லாமே சரியாக இருக்கு. ரத்த அழுத்தம், சர்க்கரை, எல்லாமே
நார்மல்.உனக்கு என்ன பிராப்ளம் அரவிந்த்?”

அவர்கேட்டதும் அவன் உடனே பதிலளித்தான்.

“அதுதான் எனக்கும் புரியல்லே டாக்டர்.”

காலையில் எழுந்திருக்கும்போது உற்சாகமாய் இருக்கேன் ஆனால் கொஞ்சநேரத்திலேயே மனசு தளர்ந்துபோய் நான்
ரொம்படல்லாயிடறேன்.
எதுவுமே செய்யப்
பிடிக்கல்லே. ஆபீஸ்ல வேலையிலும் மனசுலயிக்க மாட்டேங்குது”
காலை யில் எழுந்ததும் என்ன பண்ணுவீங்க”
டாக்டர் கேட்டார்.

“காப்பி குடிக்கும்போது தினசரியை படிப்பேன் இல்லாட்டி நான் பார்க்காமல் நின்று போன
மெகா சீரியல் எதையாச்சும் யூடியூபில் பார்ப்பதும் உண்டு”

“புரிஞ்சிடுச்சு உங்க பழக்கத்தை கொஞ்சம் நீங்க மாத்திக்கணும்.”

“என்ன சொல்லறீங்க டாக்டர்?”

“காப்பி குடிக்கும்போது தினசரியை படிக்காதீங்க . தொலைக்காட்சி த்தொடர் எதையும் பார்க்காதீங்க. முடிந்தால் மனசுக்கு இதம்தரும் இசையைக்கேளுங்க.பக்கத்திலே
இருக்கிற பூங்காவில் கொஞ்சநேரம் போய்வாக் பண்ணுங்க. அங்கே காற்றில் அசையும்
மரங்களையும், அதில் அமர்ந்து விதவிதமாய்குரல் எழுப்பும் பறவைகளையும்,இனிய மணத்தைப்பரப்பிக்கொண்டு பூத்துக்குலுங்குகிற செடிகளையும் பார்த்து ரசியுங்கள். இவை
எல்லாமே மனதுக்கு உற்சாகத்தை அளிக்கும் வீடுதிரும்பியபின் தினசரியை படித்தாலோ,
சீரியலைப்பார்த்தாலோ அவை வெளிப்படுத்தும் கொலை கொள்ளை, லஞ்ச விவகாரங்கள்,கடத்தல், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் மனசைபாதித்து தொய்வு ஏற்படுவதைத் தடுக்கும். நீங்க நடக்கும்போது கிடைக்கும் உற்சாகம் பக்கபலமாக இருக்கும்.”

டாக்டர்புன்னகையுடன் சொன்ன விஷயம் சரியானது என்பதை அரவிந்த் மறுநாளே உணர்
ந்தான்.

2 Comments on “லக்ஷ்மிரமணன்/என்னதான் பிரச்சினை?”

Comments are closed.