
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
புதன் கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு
*
உறைக்க சொல்வார்
உற்றார்;
சிரித்து சொல்வார்
ஊரார்;
பொங்கும் காலத்தில்
பரபரப்பாய் பலதும்
பேசி; அகலா நிற்பார்
வீணர்.
அனுசரணையாய்
அமைதி காப்பர், அன்பினர்.
மங்கும் காலத்தில்
பரிதவித்து வருவார்
உற்றார்;
பாராமுகமாய் இருப்பார் ஊரார்;
இடித்துரைத்தாலும்
இடையூறல்ல;
கடிந்துரைத்தாலும் தவறல்ல;
கவனமாய் உய்த்துணர,
உற்றவரை அறிவாய்.
போலியாய் பழகி, பசப்பாய் பேசி,
பொய்யாய் ஓரு முகமணியும் அவரை, உயரும் வழியில்
பரவும் முள்; என புரிந்து களை;அவரை.
தவறாமல் அவருக்கும்
உன் புன்னகையை பரிசாய் அளி;
உனக்கு இடையூறு
செய்யாமல் இருக்க.
13-12-2023
