
சொல் புதிது, இணைய கால, 55வது கவி அரங்கம், தேதி 13.12 2023 கிழமை புதன், நேரம் மாலை 05.35, “முன்பனி காலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
வருகிறது மார்கழி மாதம்
காலைப் பொழுது,
அதுவும் பனியில்
உறைந்து மலரை மறைத்தது
ஆனந்தம் உண்மைதான்.
போர்த்தித் தூங்கிய
பலர் நடுவே
பால் போடும் பலரும்
தினசரி போடும் பலரும்
துச்சமாக பனியை மதித்தனர்.
காலை நடைப்பயிற்சி தவிர
விளையாடும் மாணவர் கூட்டம்
தேநீர்க் கடையில் கூட்டம்
பூமாலைக் கடையில்
வேலை துவங்கிவிட்டது.
பனி கண்டு
மிரளாத பலர் நடுவே
மிரண்டு வாழும்
எத்தனை பேர்
பதுங்குவதேன் தெரியவில்லை.
சிட்லபாக்கம்
13 12 2023 மாலை 05.35
