
(தமிழவன் தொகுத்த இளையவர்களின் புதுக்கவிதைகள் என்ற தொகுப்பிலிருந்து)
தற்போதெல்லாம்
என் காமத்தை
ஓர் இறகென
உன் கரங்களில் ஒப்பிட்டுப்
பழகியிருக்கிறேன்.
அது ஒரு மீட்சியென, ஒரு துளிர்த்தலென,
ஒரு நகர்த்தலென,
ஒரு கரைதலென, உன்னுள் வளர்ந்து மினுங்குகிறது
நம் அன்பின் உவர்ப்புக்கு ஏதுவானதாக
நம் காமத்தை தேக்கி வைத்திருக்கும்
உன் நிலத்திற்கு ஓராயிரம் பறவைகள் திரும்புகின்றன
(காடறியாது பூக்கும் மலர் என்ற தொகுப்பிலி ருந்து)
56வது இணைய கால கவி அரங்கத்தில் வாசித்தது.
