
பொற்கிண்ணத்தில் நீ விரும்பும்
புலால் உணவு
மிகுதிய்த் தருவேன், தலைவனுடன்
போன மகள்
இன்று மாலை வாசித்த கவிதை.
காகம்
பொற்கிண்ணத்தில் நீ விரும்பும்
புலால் உணவு
மிகுதிய்த் தருவேன், தலைவனுடன்
போன மகள்
இல்லம் வரக் கரைவாய்
என்றாள்
நற்றிணைத் தாய்.
கருப்பு நிறமென யாரும்
வெறுப்பாரோ?
நிறமென்ன?குலமென்ன
மனமே
உறைகல், மொழிவதே
வடிகால்.
கிடைத்ததைப் பகிர்ந்து
உண்ணும்
ஒற்றுமை சொல்லும்
ஒலிபெருக்கி நீ.
கிளி,புறா,மைனாவை
வளர்ப்பார்.
உனை
வளர்ப்பவர் எவருமில்லை.
நம்பிக்கை ஒரு புறமிருக்க
அறிவுத்திறன்
மிகுந்ததால் சமூக விரோதச்
செயலுக்கு
எளிதில் பழகி உதவுகிறாய், எனும்
ஆய்வு.
எல்லாம் அறிந்த காகம்நீ
எருதின்
வலி அறியாது புண்பட்ட
காயத்தைக்
கொத்தி நிற்கலாகுமோ ?
