நாகேந்திர பாரதி/தாத்தா

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 56


—————

கண்மாய்க் குளியல்
வேட்டி துவைத்தல்

எட்டுமுழ வேஷ்டி
இறுக்கிய பெல்ட்டு

தொளதொள ஜிப்பா
தோளில் துண்டு

மார்கழி மாதம்
அதிகாலை பஜனை

நாதஸ்வர ஓசைக்குத்
தலையாடும் நடனம்

பட்டணம் பொடி டப்பா
பழுப்பு நிற கர்சீப்பு

கோயில் மணியோசை
அர்த்தஜாம பூஜை

இப்போது நினைத்தாலும்
இழுத்து வருகிறது

எப்போதோ மறைந்திட்ட
தாத்தாவின் நினைவை

————