
சொல் புதிது, இணைய கால, 56வது கவி அரங்கம், தேதி 14.12 2023 கிழமை வியாழன் , நேரம் மாலை 05.10, “வேலை கிடைக்காதவன் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால்.
“
ஒரு குவளை தண்ணீரைக் கவிழ்த்தான்
மற்றொரு குவளையில்
அந்த குவளை நிரம்பியது
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
இப்படியே மறுபடி மறுபடி
செய்து கொண்டே இருந்தான்
திருப்தி தரவேயில்லை
நேரம் மட்டும் போனது
பொழுது போக வேண்டாமா?
அவனுக்கு வேரென்ன வேலையிருக்கு?
வேலை கிடைக்கவில்லை
விரக்தியில் விபரீதம்
வீணான காலம்
பயனற்று போச்சு.
சிட்லபாக்கம்
14 12 2023 மாலை 05.10
