தாகூர் கவிதை

ஆறு வயது சிறுவன் சத்திய ஜித் ரே, 66 வயது தாகூரிடம்
அவரின் கையெழுத்துக்காக ஒரு நோட்டு புத்தகத்தை தருகிறான் .
வெறும் கையெழுத்து போடாமல் ஒரு கவிதையையும் அதில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தருகிறார் .

அப்போது தாகூருக்கு தெரியாது, சத்திய ஜித் ரே உலகம் போற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார் என்பது.
சத்திய ஜித் ரேக்கும் தெரியாது தாகூரின் ஐந்து படைப்புகளை திரைப்படமாக எடுப்போம் என்று.

தாகூரின் கவிதை

“ஆண்டுகள் பல பயணித்தேன்.

உலக நாடுகளில் கால் பதித்தேன்.

மலைகளைக் கண்டேன்.

கடல்களைக் கண்டேன்.

ஆனால் வீட்டு எதிரே உள்ள

நெற்கதிரில் பூத்திருக்கும்

பனித்துளியை காண தவறினேன்.”

தாகூர்.

வாசித்தது இராஜாமணி.சென்னை.
(விருட்சம் சொல் பதிது குழுவில்)
14.12.2023.

One Comment on “தாகூர் கவிதை”

Comments are closed.