லலிதா ஷ்யாம்/ஆயிரம் பெண்கள் இருந்தாலும் அவள் போல் ஆகுமா?

அவள் ஒரு தேவதை, தங்க மகள்.
வாணிலிருந்து குதித்த ரம்பையோ
அழகிய இடை பெண்களே வியக்கும்
அன்ன நடை
அவளை சுற்றிலும் எப்பொழுதும் தோழியர் படை
அவள் அணிவது வண்ண உடை
இடைவரை தவழும் மேக கூந்தல்
சூரிய ஒளி போல் மின்னும் அழகிய முகம்
கள்ளமிள்ளா அழகிய வெள்ளை உள்ளம்.
நன்றாக படித்தவள் ஒழுக்கம் நிரம்பிய பெண்
எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாள்
மல்லிகை அவள் கூந்தலை அலங்கரிக்கும்.
ஒரு முறை பார்த்தால் மறுமுறை பார்க்க வைக்கும்.
அவள் நிறம் மாநிறம்
ஆயினும் அதில் அழகு ததும்பும்
கம்பன் அவளை கண்டு வியப்பான்
பாரதியோ கவிதை வடிப்பான்
ஆயிரம் பூக்கள் அவள் வரும் வழியில் பூத்திருக்கும்
மோகன ராகத்தில் பாட்டிசைப்பேன்
நிலவும் நட்சத்திரமும் அவளுக்காகத்தான்
ஆயிரம் பெண் இருந்தாலும் அவளுக்கு ஈடாகுமா?