சுரேஷ் ராஜகோபால்/உண்மையும் பொய்யும்

சொல் புதிது, இணைய கால, 59வது கவி அரங்கம், தேதி 17 12 2023 கிழமை ஞாயிறு , நேரம் மாலை 05.40, “உண்மையும் பொய்யும் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லப்பாக்கம் சுரேஷ் ராஜகோபால்.

வரிசையில் நின்றேன்
முன்னால் பலர் நின்றனர்
பின்னாலும் பலர்…
இந்த வரிசைக்கு
எப்படி வந்தேன்…
வியந்தேன், விழித்தேன்.

எனக்குப் பின்னால்
என்னை விட உயரமாக
இரண்டு பொய்கள் நின்றன
முன்னாலோ வலுவான
துரோகங்கள் பல நின்றன

வஞ்சகம்தான் வரிசையை வழி நடத்தியது
பேராசை நயவஞ்சகமாக வரிசையில்
புகுந்து நின்றது .
பேராசை உள்ளே புகுந்ததால்
தள்ளுமுள்ளு ஏற்பட
நெரிசலில் கால் இடறி
கீழே விழுந்து விட்டேன்

என்னைக் கண்டு வரிசையே
சிரித்து சத்தம் போட்,டது

முன்னிருந்த வழநடத்திய வஞ்சகம்
“என்ன சத்தம் அங்கே” என்று
கத்தியது

“உண்மை விழுந்து விட்டது “
என்று பின்னாலிருந்த பொய்
கூறியவுடன் அனைவரும் சிரித்தனர்
என்னைத் தவிர
அனைவரும் மகிழ்ச்சியில்…


சிட்லப்பாக்கம்
17 12 2023 மாலை 05.35