சசிகலா விஸ்வநாதன்/பாவம் அவன்

இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
இணைய கால கவியரங்கம்
ஞாயிற்றுக்கிழமை
மாலை மணி 5-15
கவிதையின் தலைப்பு

குடல் வெந்து போகும் என்று;
அவன் அறிவான்.
விட்டெறியும் காசுகள்
வீட்டிற்கு அவசியம்
என்று அறிவான்.
தாளா நோவு என்றும்,
தீரா துக்கம் என்றும்,
மாளா வேலை என்றும்,
மனையாள் இசைவாய் இல்லை என்றும்,
கதை படிப்பான்.
தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும்
இவன்…
கண்டனத்திற்கு உரியவன்
பரிதாபத்துக்கு உரியவனா?…
ஆனாலும்
பாவம்! என்றே மனம் கனிகிறதே!



17-12-2023