எஸ்ஸார்சி/சங்கடம்

இணையக் கால கவியரங்கம். 59

17/12/23

அருகில்தான் வீடு
நண்பரைப்பார்த்து
வரவேண்டும்
என்னைச் சோடித்து
முடித்தேன்
ஃபோன் போட்டேன்
மணி ஒலித்தது அவர்
எடுக்க வில்லையே.
எங்கேனும் சென்றுமிருக்கலாம்
அவரே எழுதிய புத்தகம்
ஒன்று தருவதாய்
அவர்தான் சொன்னார்
போனை எடுக்காமல்
நம்மைத் தவிர்க்கிறாரோ
கெட்ட மூளைதான்
சட்டென
வேலையும் செய்கிறது
ஃபோன் போட்டு விட்டுப்பின் வாருங்கள் அவரே சொல்லியுமிருக்கிறார்
நேராகப்போவது தவறாய்
முடியலாம்
அவரே அழைத்துப் பேசினால் உண்டு.
இல்லையேல் இல்லையேல்தான்.