மீனாட்சி்சுந்தரமூர்த்தி/என் பாதையில்

இன்று மாலை. வாசித்த கவிதை.

என்னோடு வரும் நிலா,
ஏதேதோ
பேசும் நிலா.

தாரகைகள் உறங்கி
நிற்க
தனியுலா வந்த நிலா.

இரவுக் காவலுக்கு
அரசர்
மாறு வேடத்தில் வருவர்.
உயரத்தில்
இருப்பதனால்
உனக்கது வேண்டாமோ ?

பளீரென ஒளிவீசி
வஞ்சம்
இல்லா மனம் பெறுக
என்றே
மக்களை வாழ்த்துவாயோ !

திங்கள் தோறும் நீ
தேய்ந்து
வளர்கிறாய். கவலை
எதற்கும்
கொள்வதில்லை.

ஊருறங்கும் வேளையில்
வீடு புகுவார்,
அடாதன செய்வார்
எவரும்
உன் பார்வைக்குத்
தப்புவதில்லை.

நீ நினைத்தால் தடுத்திடலாம்
தண்டிக்கலாம்,
ஆனாலும்
வாய் மூடி மௌனம்
காப்பது
ஏன் சொல் நிலவே !!!.

.